பொதுமக்களுக்கு இடையூறு; 2 வாலிபர்கள் கைது

பொது சொத்துக்கு பங்கம் விளைவித்துள்ளனர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
பொதுமக்களுக்கு இடையூறு; 2 வாலிபர்கள் கைது
Published on

சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு கோட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் சையத் (வயது 23). பாத்திர வியாபாரி. இவரது நண்பர் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் சபீர் கான் (21). இவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு சையதும், சபீர் காணும் போக்குவரத்தை வழிமறித்து பொது சொத்துக்கு பங்கம் விளைவித்துள்ளனர். மேலும் அவ்வழியாக சென்ற பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தினர்.

இது குறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சையத் மற்றும் சபீர்கானை கைது செய்தனர்.

மேலும் போளூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி 2 வாலிபர்களை ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com