ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பவித்ரோத்சவம் தொடக்கம்

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்திருவண்ணாமலை சைவ சாஸ்திர பிரசார சபா சார்பில் நடந்தது
ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பவித்ரோத்சவம் தொடக்கம்
Published on

வந்தவாசி:-

வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 3 தின பவித்ரோத்சவம் தொடங்கியது. திருவண்ணாமலை சைவ சாஸ்திர பிரசார சபா சார்பில் நடைபெற்ற இந்த விழாவையொட்டி காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அனுக்ஞை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம் நடைபெற்றது.

மேலும் அங்குரார்ப்பணம், முதற்கால யாக பூஜை, கந்த பவித்ரஸமர்பணம், பூர்ணாஹூதி நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த சிறப்பு வாய்ந்த பூஜையை வந்தவாசி சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com