தொழிலாளியை தாக்கிய முதியவர் கைது

இரும்பு வாளியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார் போலீசார் விசாரணை
தொழிலாளியை தாக்கிய முதியவர் கைது
Published on

கண்ணமங்கலம்:

சந்தவாசல் அருகே கல்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, தொழிலாளி. இவரது மனைவி பார்வதி (வயது 44). அவரது வீட்டின் எதிரே வசிக்கும் பிச்சாண்டி (63) என்பவர் பார்வதியை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதனை தட்டிக்கேட்ட ஏழுமலையை, பிச்சாண்டி அங்கிருந்த இரும்பு வாளியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதில் காயமடைந்த ஏழுமலை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பார்வதி சந்தவாசல்போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சாண்டியை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com