படவேடு திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம், தீமிதி விழா

தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து தீ மிதித்தனர் தருமர் பட்டாபிஷேகம் நடந்தது
படவேடு திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம், தீமிதி விழா
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த படவேடு மதுரா வீரக்கோவிலில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த மாதம் மகாபாரத அக்னி வசந்த விழா தொடங்கியது.

இதைமுன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து கொடியேற்றத்துடன் அலகு நிறுத்தப்பட்டது. நேற்று கோவில் முன்பு அமைக்கப்பட்ட பிரமாண்ட துரியோதனன் சிலை முன்பு துரியோதனன் பீமன் வேடமணிந்து துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து தீ மிதித்தனர்.

இன்று காலை தருமர் பட்டாபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை படவேடு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com