கூட்டுறவு சங்க பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கலெக்டர் தகவல்நேரடி நியமனம் மூலம் நிரப்பபட உள்ளது
கூட்டுறவு சங்க பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள 33 உதவியாளர்,எழுத்தர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பபட உள்ளது.

இதற்காக ராணிப்பேட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நவம்பர் 10-ந் தேதிஅன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதா ரர்களிடமிருந்து விண்ணப்ப ங்கள் https://drbrpt.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே டிசம்பர் 1-ந்தேதியன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 24-ந் தேதிஅன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ராணிப்பேட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படும்.

இதற்கான கல்வித் தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும். முற்பட்ட வகுப்பி னருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

மேலும் இது தொடர்பான விரிவான விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் (https://drbrpt.in) வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com