வீட்டிற்கு வெளியே தூங்கிய பெண் வெட்டிக்கொலை

மர்ம நபர்கள் சாந்தியின் கழுத்து, முகத்தை அரிவாளால் வெட்டினர் போலீசார் விசாரணை
வீட்டிற்கு வெளியே தூங்கிய பெண் வெட்டிக்கொலை
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள காலூர் செல்வ நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். சென்னையில் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்.

இவருடைய மனைவி சாந்தி (வயது 45). மகன் சிவகுமார் (22) சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். மகள் பிரியங்கா ( 20).

நேற்று சாந்தி வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கினார்.

நள்ளிரவில் மர்ம நபர்கள் சாந்தியின் கழுத்து முகம் ஆகியவற்றில் அரிவாளால் வெட்டினர்.இதில் சாந்தி இறந்தார் .

இன்று காலையில் சாந்தி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அவரது உறவினர்கள் அழுது துடித்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாந்தியை கொலை செய்தவர்கள் யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com