அரசு பஸ் மீது லாரி மோதி 7 பேர் படுகாயம்

தூக்க கலக்கத்தில் டிரைவர் வாகனம் ஓட்டியதால் விபரீதம் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்
விபத்தில் சேதமடைந்த பஸ். கவிழ்ந்து கிடந்த லாரி.
விபத்தில் சேதமடைந்த பஸ். கவிழ்ந்து கிடந்த லாரி.
Published on

போளூர்:

போளூரில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் செங்கம் நோக்கி இன்று அதிகாலை 4 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.

செங்கத்தில் இருந்து கண்டெய்னர் லாரி போளூர் நோக்கி வந்தது. காங்கேயனூர் அருகே வரும்போது தூக்க கலக்கத்தில் டிரைவர் ஓட்டியதால் லாரி எதிர்பாராத விதமாக எதிரே வந்த பஸ் மீது மோதியது.

இதில் பஸ் சேதமானது. லாரி சாலையோரம் கவிழ்ந்தது. பஸ்சில் பயணம் செய்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்ற வர்கள் ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு போளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக 4 பேரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போளூர் போலீசார் பஸ்சையும், லாரியும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com