5000 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி

திருவண்ணாமலையில் மாவட்ட தி.மு.க. சார்பில் நடந்ததுஅமைச்சர் எ.வ. வேலு தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு உணவு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு உணவு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல் - அமைச்சர் கருணாநிதி 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு, கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு உணவு வழங்குதலை தொடங்கி வைத்தார்.

தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாநில பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பொன்.முத்து, பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலைஞர் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பொதுப்பணித்துறை அமைச்ச ரும், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பின ருமான எ.வ.வேலு கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து, 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com