மது பாட்டில் கடத்திய 3 பேர் கைது

கார் பறிமுதல் போலீசார் விசாரணை
மது பாட்டில் கடத்திய 3 பேர் கைது
Published on

வெம்பாக்கம்:

வெம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு தூசி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 228 மது பாட்டில்கள் கடத்தியது தெரிய வந்தது. விசாரணையில் சுருட்டல் கிராமத்தைச் சேர்ந்த மணி, முருகன், அன்பழகன் ஆகியோர் என தெரிந்தது.

போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com