லாரியில் பேட்டரிகளை திருடிய 2 பேர் கைது

கண்காணிப்பு கேமராவில் சிக்கினர் ஜெயிலில் அடைத்தனர்
லாரியில் பேட்டரிகளை திருடிய 2 பேர் கைது
Published on

வந்தவாசி:

வந்தவாசி அருகே கீழ்சாத்தமங்கலம் கிராமம் அண்ணாநக ரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31), லாரி உரிமையாளர். இவர் கடந்த 26-ந் தேதி 2 லாரிகளை கீழ்சாத்தமங்கலம் பைபாஸ் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள தனியார் வாட்டர் சர்வீஸ் அருகில் நிறுத்திவிட்டு சென்றார்.

மறுநாள் வந்து பார்த்தபோது லாரிகளில் இருந்த பெரிய பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சதீஷ்குமார் பொன்னூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தணிகை வேல் மற்றும் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது சேத்துப்பட்டு தாலுகா, மேலத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (30), சிவா (29) ஆகியோர் பேட்டரியை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பேட்டரிகள் திருடுவதற்காக பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com