நாட்டறம்பள்ளி, ஆம்பூர் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த 6 மயில்கள்

நாட்டறம்பள்ளி, ஆம்பூர் அருகே மர்மமான முறையில் 6 மயில்கள் இறந்து கிடந்தது.
நாட்டறம்பள்ளி அருகே மர்மமான முறையில் 4 மயில்கள் இறந்து கிடந்ததை படத்தில் காணலாம்.
நாட்டறம்பள்ளி அருகே மர்மமான முறையில் 4 மயில்கள் இறந்து கிடந்ததை படத்தில் காணலாம்.
Published on

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த கரிமலை வெள்ளை பாறை அருகே நேற்று மாலை திடீரென்று 4 மயில்கள் இறந்து கிடந்தன. இது குறித்து அவ்வழியாக சென்ற அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் திருப்பத்தூர் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் திருப்பத்தூர் வனத்துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த 4 மயில்கள் உடல்களையும் மீட்டனர்.

பின்னர் அந்த இடத்திலேயே குழி தோண்டி புதைத்தனர். 4 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர்

ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சியில் பைரப்பள்ளி கிராமம் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு அருகில் ஆம்பூர் துருகம் காப்புக் காடுகள் உள்ளன. 

மிட்டாளம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் கோவிந் தசாமி என்பவருக்குச் சொந்தமான 3 ஏக்கர் பரப்பளவு  மாந்தோப்பு பைரப்பள்ளியை ஒட்டி உள்ளது. 

கால்நடைகளை மேய்க்க, அந்த மாந்தோப்பு வழியாக சிலர் ஓட்டிச் சென்றனர். மாந்தோப் பில் மயில்கள் கூட்டமாக சுற்றித் திரிவதைக் கண்ட அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, சுமார் 2 வயது மதிக்கத்தக்க 2 ஆண் மயில்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது. 

உடனடியாக கால்நடை மேய்ப்போர் ஆம்பூர் வனச்சரகர் (பொறுப்பு) இளங்கோவனுக்கு தகவல் கொடுத்தனர். மிட்டாளம் கிராம நிர்வாக அலுவலர் ப்ரீவிதா, வனவர் பாலகிருஷ்ணன், வனக் காப்பாளர்கள் ராஜ்குமார், கணேசன், ராகுமார் மற்றும் வனக்கா வலர் கணேசன் ஆகியோர் இறந்துபோன மயில்களை பார்வையிட்டனர். 

பின்னர், திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு மயில்கள் உடற்கூறு ஆய்வு செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com