திருமுருகன்பூண்டி நகராட்சி புதிய கமிஷனர் பொறுப்பேற்பு

நகராட்சிக்கு தேவையான அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.கமிஷனராக அப்துல் ஹாரிஸ் பொறுப்பேற்றுக்கொண்டார்.
திருமுருகன்பூண்டி நகராட்சி புதிய கமிஷனர் பொறுப்பேற்பு
Published on

அனுப்பர்பாளையம் :

திருமுருகன்பூண்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில் இன்னும் நகராட்சிக்கு தேவையான அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. மேலும் நகராட்சிக்கு நியமிக்கப்பட்ட முதல் கமிஷனர் முகமது சம்சுதீனுக்கு பிறகு இதுவரை நிரந்தர கமிஷனர் நியமிக்கப்படாத நிலை இருந்தது. இதனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு 5 கமிஷனர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

கடைசியாக வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் மோகன்குமார் திருமுருகன்பூண்டிக்கு பொறுப்பு கமிஷனராக இருந்து வந்த நிலையில், திருமுருகன்பூண்டி நகராட்சி புதிய கமிஷனராக திருத்துறைப்பூண்டி கமிஷனராக பணியாற்றி வந்த அப்துல் ஹாரிஸ் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக அப்துல் ஹாரிஸ் பொறுப்பேற்றுக்கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com