திருமருகலில், வர்த்தகர் சங்க கூட்டம்

திருமருகல் கடைவீதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.அனைத்து கடைகளும் காப்பீடு செய்யப்பட வேண்டும்.
திருமருகலில் வர்த்தகர் சங்க கூட்டம் நடந்தது.
திருமருகலில் வர்த்தகர் சங்க கூட்டம் நடந்தது.
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வர்த்தக சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருமருகல் வர்த்தக சங்கத் தலைவர் ஜெயபால் சங்கர் தலைமை வகித்தார்.

செயலாளர் காமராஜ், துணைத் தலைவர் காசி அறிவழகன், பொருளாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். அனைவரையும் தகவல் தொழில் நுட்ப அமைப்பாளர் ரஞ்சித் வரவேற்றார்.

கூட்டத்தில் திருமருகல் கடைவீதியில் சங்கத்தின் பெயர் பலகை வைக்க வேண்டும், அனைத்து கடைகளும் காப்பீடு செய்யப்பட வேண்டும்,

விபத்துக்கள் நடை பெறாமல் இருக்க திருமருகல் கடைவீதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும் புதிய செயற்குழு உறுப்பினர்கள் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் சங்க நிர்வாகி ஹரிஹரன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com