வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை

திருக்கோவிலூர் அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் தற்கொலை
பெண் தற்கொலை
Published on

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள கீழத்தாழனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் இவரது மனைவி சங்கீதா (வயது 25). கட்டிட மேஸ்திரி. இவர்களுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தன்விகா என்கிற 2 வயது பெண் குழந்தை உள்ளது.

திருமணத்தின் போது சங்கீதாவுக்கு 11 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் வரதட்சணை கொடுத்தனர். இந்த நிலையில் தன்விகாவிடம் கணவர் வினோத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீண்டும் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தனர். இதனால் மனமுடைந்த சங்கீதா தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கலியன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சங்கீதாவுக்கு திருமணமானமாகி 4 ஆண்டுகள் மட்டுமே ஆவதாலும், வரதட்சனை கொடுமை காரணமாக இருந்ததாலும் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com