காரமடை திம்மராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண விழா

திம்மராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. 3 மணிக்கு திம்மராய பெருமாள் கருடவாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
காரமடை திம்மராய பெருமாள்  கோவிலில்  திருக்கல்யாண  விழா
Published on

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே காரமடை கா.புங்கம்பாளையம் திம்மராய பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து 10 மணிக்கு அம்மன் அழைப்பும் மற்றும் பஜனை நடைபெற்றது. பின் மதியம் 1.30 மணிக்கு மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 3 மணிக்கு திம்மராய பெருமாள் கருடவாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திம்மராயபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த உற்சவத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com