புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் தேர்பவனி

தேர்பவனி விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.உப்பு, மிளகு ஆகியவற்றை தேரின் மீது தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் தேர்பவனி நடந்தது.
புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் தேர்பவனி நடந்தது.
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் அடுத்த பெரும்பாண்டியில் உள்ள புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் 103-வது ஆண்டு தேர்பவனி விழா கடந்த 8-ந்தேதி மறைமாவட்ட முதன்மை குரு மரியதாஸ் தலைமையில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து, தினமும் அருட்தந்தையர்களால் ஜெபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

முன்னதாக அருள் தந்தை ஆரோக்கியாதாஸ் காலை திருப்பலி, மறையுரை அருள் செபஸ்தியார் மற்றும் மாலை ஜெபமாலை நவநாள் திருப்பலி, மறையுரை பங்கு தந்தைகள் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டி ருந்த தேரில் புனித பெரிய நாயகி அன்னை எழுந்தருளி தேர்பவனி நடைபெற்றது.

அப்போது, ஒவ்வொ ருவரும் உப்பு, மிளகு ஆகியவற்றை தேரின் மீது தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டாமைகள், குடந்தை அரசன், ஸ்டீபன், சகாயராஜ், ஜான் பீட்டர் ராஜ் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பா ளர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com