பாவூர்சத்திரம் அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஊரணி சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு

தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் மரப்பலகை அடித்து சிமெண்ட் கலவை போடப்பட்டிருந்த இடத்தில் ஒரு பகுதியில் திடீரென சரிந்து விழுந்தது. சிமெண்ட் கலவை தரம் இல்லாமல் போடப்பட்டதால் தான் சரிந்து விழுந்துள்ளது என்று அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
பாவூர்சத்திரம் அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஊரணி சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு
Published on

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் கிராமத்தில் ஊரின் மையப்பகுதியில் உள்ள மிக பழமையான ஊரணியின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி சுற்றுச்சுவர்கள் மழையின் போது சரிந்து விழுந்தது. இதனால் அருகில் நின்ற டிரான்ஸ் பார்மர் ஆபத்தான நிலை யில் காட்சியளித்ததால் பெரும் விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்காக கழற்சி வைக்கப்பட்டது.

சரிந்து விழுந்த பகுதியில் சுற்றுச்சுவர்கள் புதிதாக அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் தொடங்கப் பட்டுள்ள நிலையில் மரப் பலகை அடித்து சிமெண்ட் கலவை போடப்பட்டிருந்த இடத்தில் ஒரு பகுதியில் திடீரென சரிந்து விழுந்தது. சிமெண்ட் கலவை தரம் இல்லாமல் போடப்ப ட்டதால் தான் சரிந்து விழுந்துள்ளது என்றும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

எனவே முறையாக சிமெண்ட் ஜல்லி உள்ளி ட்டவற்றை முறை யாக கலவை செய்து தரமான சுற்று சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வ லர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com