மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டம் கூடலூரில் இன்று விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டத்தை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்த காட்சி.
போராட்டத்தை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்த காட்சி.
Published on

கூடலூர்:

முல்லை பெரியாறு அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரை கொண்டு மதுரை மாநகர குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் குருவனூத்து பாலத்திலிருந்து பைப் லைன் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்திற்கு ஆரம்பம் முதலே தேனி மாவட்ட விவசாயிகள் மற்றும் சலவை தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதனையும் தாண்டி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று பாரதிய கிசான் சங்கம், முல்லை சாரல் விவசாயிகள் சங்கம், ரெட் தொண்டு நிறுவன அமைப்பை சார்ந்தவர்கள் குருவனூத்து பாலத்திலிருந்து வைகை அணை வரை தொடர் ஓட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில் முல்லை பெரியாறு அணையிலிருந்து நேரடியாக பைப் லைன் மூலம் மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்வதால் தேனி மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்பை சந்திப்பார்கள். குறிப்பாக கம்பம் பள்ள–த்தாக்கு பகுதி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய இயலாத நிலை உருவாகும்.

எனவே இத்திட்டத்தை வைணை அணையிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் உத்தப்பநாயக்கனூரில் தடுப்பணை கட்டப்படும் என அறிவித்தார்.

ஆனால் அத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. அந்த தடுப்பணை கட்ட–ப்பட்டால் தேனி மாவட்ட விவசாயிகளுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் ஓட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் ஏ.எஸ்.பி .ஸ்ரேயாகுப்தா தலைமையில் கூடலூர் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் மற்றும் ஏராளமான ேபாலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் முன் அனுமதியின்றி தொடர் ஓட்டம் நடத்தக்கூடாது என விவசாயிகளை எச்சரத்தனர். இதனையடுத்து நாங்கள் நடைபயணமாக செல்கி றோம் என்று தெரிவித்தனர்.

அதற்கும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதனை தொடர்ந்த தங்கள் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் திரும்பிச் சென்றனர். இத்திட்டத்தை கைவிடும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மீண்டும் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்திற்கு திரள்வார்கள் என்று தகவல் பரவியதால் கூடலூரில்ஏராளமான போலீசார் குவிக்க ப்பட்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com