தியாகதுருகம் அருகே வீட்டின் பீரோவை உடைத்து ரூ.40 ஆயிரம் பணம் திருட்டு: 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

கதிர்வேல் தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டி ருந்தார். கதிர்வேல் கீழே இறங்கி வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் கதவின் அருகே நின்று கொண்டு இருப்பது தெரிய வந்தது.
தியாகதுருகம் அருகே  வீட்டின் பீரோவை உடைத்து ரூ.40 ஆயிரம் பணம் திருட்டு: 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு
Published on

கள்ளக்குறிச்சி: 

தியாகதுருகம் அருகே வேங்கைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 34) விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் மேல் மாடியில் தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டி ருந்தார். அப்போது கீழ் வீட்டில் உள்ள அறை யில் கதிர்வேல் அண்ணன் பெருமாள் மனைவி கவிதா தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டப்ப டாமல் சாத்தியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நள்ளிரவில் வீட்டில் கதவை உடைப்பது போல் சத்தம் கேட்டதால் சந்தேகம் அடைந்த கதிர்வேல் கீழே இறங்கி வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் கதவின் அருகே நின்று கொண்டு இருப்பது தெரிய வந்தது. இவரைப் பார்த்த கதிர்வேல் கூச்சலிட்டார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு மர்ம நபர்கள் 2 பேர் வீட்டில் இருந்து தப்பி ஓடினர். உள்ளே சென்று பார்த்த போது கவிதா படுத்திருந்த அறையை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு மற்றொரு அறையில் இருந்த பீரோ கதவை உடைத்து அதிலிருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், வரஞ்சரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குண சேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்த னர். மேலும் கைரேகை நிபுணர் ராஜவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தார். இது குறித்து கதிர்வேல் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com