பூட்டிய வீட்டின் நகை -பொருட்கள் திருட்டு

மூன்றரை பவுன் தங்க நகை, 2 கேமரா ஆகியவை திருடு போனது.போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூட்டிய வீட்டின் நகை -பொருட்கள் திருட்டு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை பாரதிநகரை சேர்ந்தவர் நோயல்ஜாவ். இவரது மனைவி அந்தோணி லில்லி புஷ்பம் (வயது 70).

சம்பவத்தன்று கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு ஊட்டிக்கு சென்றனர்.

அப்போது இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளது என செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.

இதைக் கேட்டு இருவரும் பதறியடித்துக் கொண்டு வந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன.

பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த மூன்றரை பவுன் தங்க நகை, 2 கேமரா, வாட்ஜ், பட்டுப் புடைவை ஆகியவற்றை மர்ய நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து அந்தோணி லில்லி புஷ்பம் தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com