தனியார் நிறுவனத்தில் பொருட்கள் திருட்டு

நிறுனத்தில் பொருட்கள் திருடுபோனது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் நிறுவனத்தில் பொருட்கள் திருட்டு
Published on

பீளமேடு,

கோவை ராமானுஜ நகரை சேர்ந்தவர் வசந்த் (வயது 39). இவர் பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலை முடித்து விட்டு நிறுவனத்தை பூட்டி வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் காப்பர் வயர், ட்ரில்லிங் எந்திரம் மற்றும் கிரைண்டர் உள்பட பல பொருட்களை திருடி சென்றனர். இதன் மதிப்பு ரூ.20, அயிரம் ஆகும்.

மறுநாள் காலை வழக்கம்போல பணிக்கு வந்தபோது நிறுனத்தில் பொருட்கள் திருடுபோய் இருந்ததை கண்டு வசந்த் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com