

தருமபுரி,
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னுசாமி. இவரது மகள் கீதா (வயது21). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்க சென்றார். விடிந்து காலையில் எழுந்து பார்த்தபோது கீதா காணவில்லை.
இதனால் பதறிப்போன சின்னுசாமி தனது மகளை உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார்.
எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து சின்னுசாமி இண்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கீதாவை தேடிவருகின்றனர்.