இளம்பெண் மர்மச்சாவு

ஏற்பட்ட தகராறு காரணமாக கார்த்திகா கோபித்துக்ெகாண்டு நடுப்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். சித்ராவின் செல்போனுக்கு வெங்கடேஷ் தொடர்பு கொண்டு கார்த்திகா திடீரென்று தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் வந்தது.
இளம்பெண் மர்மச்சாவு
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் நடுப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியண்ணன்-சித்ரா தம்பதியினரின் மகள் கார்த்திகா (வயது22). இவருக்கும் பஞ்சப்பள்ளி உடையாண்டஅள்ளியை அடுத்த பாலம்பட்டிதோப்பு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு கடந்த 3ஆண்டுகளுக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் குழந்தையும் உள்ளது.

திருமணத்தின் போது பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு ஒரு பவுன் நகைப்போட்டுள்ளனர். மேலும், பெண்ணிற்கு நகைகள் போட்டு திருமணம் செய்து கொடுத்தனர்.

இந்த நிலையில் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக கார்த்திகா கோபித்துக்ெகாண்டு நடுப்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். உடனே வெங்கடேஷ் தனது மாமியார் வீட்டிற்கு சென்று மனைவி குடும்ப நடத்த அழைத்தார். அப்போது கார்த்திகாவை அவரது பெற்றோர் சமாதானப்படுத்தி கணவரிடம் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சித்ராவின் செல்போனுக்கு வெங்கடேஷ் தொடர்பு கொண்டு கார்த்திகா திடீரென்று தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் வந்தது. உடனே கார்த்திகாவின் பெற்றோர்கள், உறவினர்கள் அங்கு விரைந்து வந்து அவரது உடலை பார்த்தபோது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். ஆனால், தரையில் கார்த்திகாவின் தலைமுடி கிடந்தது. மேலும், அவரது உடல்களில் காயங்கள் இருந்ததாக தெரிகிறது.

இதனால் கார்த்திகாவின் சாவில் மர்ம உள்ளதாக எண்ணி, சித்ரா பஞ்சப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து கார்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பெண்ணின் தாய் சித்ரா போலீசாரிடம் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆனநிலையில் கார்த்திகா வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கணவர் வெங்கடேஷ் மற்றும் உறவினர்களிடம் தருமபுரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com