ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

படித்துறையில் நின்று துணியை தண்ணீரில் அலசிக்கொண்டிருந்த பாபு திடீரென ஆற்றுக்குள் தவறி விழுந்தார்.தஞ்சை இருபது கண் பாலம் அருகே பாபுவின் உடல் கரை ஒதுங்கியது.
ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 46). தொழிலாளி. இவர் எம். கே. மூப்பனார் சாலை புது ஆற்றில் உள்ள படித்துறையில் அமர்ந்து துணி துவைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அந்த படித்துறையில் நின்று துணியை தண்ணீரில் அலசினார். அப்போது திடீரென பாபு ஆற்றுக்குள் தவறி விழுந்தார். தண்ணீரில் தத்தளித்த அவர் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என கூக்குரலிட்டார். சிறிது நேரத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

தீயணைப்புவீரர்கள் பாதுகாப்பு உபகரண ங்களுடன் ஆற்றில் குதித்து பாபுவை தேடி வந்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தஞ்சை இருபது கண் பாலம் அருகே பாபுவின் உடல் பிணமாக கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களில் புதுஆற்றில் மூழ்கி 2 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com