மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு

ஒருவர் வீட்டில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தார். அப்போது எதிர்பாரத விதமாக தவறி விழுந்தார்.
மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு
Published on

திருவாரூர்:

திருவாரூர் அருகே பெருங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது54). விவசாய கூலித்தொழிலாளியான இவர் நேற்று திருவாரூர் சாமி மடத்தெருவில் உள்ள ஒருவர் வீட்டில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தார்.

பின்னர் மரத்தை விட்டு இறங்கிய போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

உடனே அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து பக்கிரிசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பக்கிரிசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com