பெண்ணிடம் கைப்பையை பறித்து தப்பி ஓட முயன்ற வாலிபர்

தஞ்சை பழைய பஸ்நிலையத்தில் பெண்ணிடம் கைப்பையை பறித்துவிட்டு வாலிபர் தப்பி ஓட முயன்றார்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

தஞ்சாவூர்:- 

தஞ்சை மாவட்டம் பொய்யுண்டார் கோட்டை வாண்டையார்காலனியை சேர்ந்த செல்வமூர்த்தி என்பவரின் மகள் பிரவீனா (வயது23). இவர் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பிரவீணா கையில் இருந்த கைப்பையை பறித்துக் கொண்டு தப்பிச்செல்ல முயன்றார்.  

அதிர்ச்சி அடைந்த பிரவீனா கத்தி கூச்சலிட்டார். உடனடியாக பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து தஞ்சை மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.

அந்த வாலிபரிடம் மேற்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனியாண்டி விசாரணை மேற்கொண்டார். 

அதில் அவர் சுந்தரப்பெருமாள் கோவில் அண்ணா நகர் காலனியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் பிரவீன் (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com