குண்டும் குழியுமான மேம்பால சாலையை சீரமைக்க வேண்டும்

இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.வாகனங்கள் வளைத்து நெளித்து ஓட்டுவதால் விபத்துக்களும் ஏற்படுகின்றன.
குண்டும் குழியுமான மேம்பாலம்.
குண்டும் குழியுமான மேம்பாலம்.
Published on

பூதலூர்:

திருக் காட்டுப்பள்ளி- செங்கிப்பட்டி நெடுஞ்சா–லையில் பூதலூரில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது.

இந்த மேம்பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான இரண்டு சக்கர வாகனங்கள், பஸ்கள், மணல் ஏற்றி வரும் லாரிகள் சென்று வருகின்றன, இந்த மேம்பாலத்தில் மேற்புறத்தில் பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இதனால் அவற்றிலிருந்து விலகி பாதுகாப்பாக வாகனங்களை செலுத்த இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

வாகனங்களை வளைத்து நெளித்து ஓட்டுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. உடனடியாக பூதலூர் ரயில்வே மேம்பாலத்தில் குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அதேபோல விண்ணம ங்கலம் அருகே இதே சாலையில் வெண்ணாற்றில் அமைந்துள்ள பாலத்திலும் குண்டும் குழியுமாகவே காணப்படுகிறது.

வழுவிழந்த பாலம் என்று இரண்டு பக்கமும் அறிவிப்பு பலகைகளை வைத்துவிட்டு குண்டும் குழியுமாக வைத்திருப்பதால் மேலும் வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.

செங்கிப்பட்டி -திருக்காட்டுபள்ளியை இனணப்பதற்கு விண்ணமங்கலம் வெண்ணாற்றுபாலம் பிரதானமான பாலமாக உள்ளதால் இந்த பாலத்தில் மேற்பகுதியில் உள்ள சாலையில் குண்டும் குழியுமான பகுதிகளை தற்காலிக மாகவேனும் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com