2 குழந்தைகளின் தாய் மாயம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியிடம் இருந்த 2 குழந்தைகளை அழைத்து கொண்டு வந்து விட்டார்.தமிழரசி கடந்த 4-ந் தேதி வீட்டில் இருந்த வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
2 குழந்தைகளின் தாய் மாயம்
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஏ.கோடுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது55). இவரது மகள் தமிழரசி (25). இவருக்கும் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இதில் இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் வீட்டினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோபித்துக் கொண்டு எடப்பாடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்து விட்டார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியிடம் இருந்த 2 குழந்தைகளை அழைத்து கொண்டு வந்து விட்டார்.

இதனால் மனவேதனையில் இருந்த தமிழரசி கடந்த 4-ந் தேதி வீட்டில் இருந்த வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பழனி தனது மகளை உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து பழனி பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடிவருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com