

தருமபுரி :
தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்ரோடு அருகே கணவாய் பகுதியில் உள்ள வளைவான சாலையால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த சாலை 4 வழிச்சாலையாக மாற்றுப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வு கூட்டத்தில் கோவிந்தசாமி எம.எல்.ஏ. சாலையை நேராக அமைத்தால் விபத்துகள் குறையும் என்று கூறினார்.
அப்போது அந்த சாலை நேராக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒடசல்பட்டி கூட்ரோடு அருகே உள்ள கணவாய் பகுதியில் அமைக்கப்படும் 4 வழிச்சாலை பணியில் மாற்றம் செய்யப்பட்டு தற்போது அந்த சாலை நேராக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை கோவிந்தசாமி எம்.எல்.ஏ, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விபத்துக்கள் நடைபெறாத வகையில் சாலை பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் ெபான்னுவேல், அங்குராஜ், கந்தசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.