மாமல்லபுரம் வந்த மெக்சிகோ கவர்னர்: பல்லவர் கால வரலாற்றை கேட்டு வியந்தார்

கடற்கரை கோவிலை கண்டு ரசித்தார்.பாரம்பரிய நினைவுச் சின்னங்களை கண்டு ரசித்தார்.
மாமல்லபுரம் வந்த மெக்சிகோ கவர்னர்: பல்லவர் கால வரலாற்றை கேட்டு வியந்தார்
Published on

மாமல்லபுரம்:

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தின் கவர்னரான மிசெல்லே லுஜன் கிரிஷாம், அந்நாட்டு அரசு உயரதிகாரிகள் குழுவினருடன், உயர்கல்வி, வர்த்தகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைக்காக இந்தியா வந்துள்ளார்.

இந்த நிலையில், அரசுத்துறை குழுவினர் மற்றும் அவரது கணவர் ஆகியோருடன் மாமல்லபுரம் வந்தார். அங்குள்ள கடற்கரை கோவிலை கண்டு ரசித்தார்.

பல்லவர்கள், சைவ, வைணவ வழிபாட்டிற்காக, இந்த கோயிலை உருவாக்கியதும், இதுதவிர 6 கோவில்கள் கடலில் மூழ்கியது. பல்லவர்களின் துறைமுகமாக விளங்கியது, பழங்காலத்தில் பக்தர்கள் வழிபட்டு வந்த இந்த கோயில் தற்போது பாரம்பரிய நினைவுச் சின்னமாக தொல்லியல்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருவது உள்ளிட்ட பல்லவர் காலத்து வரலாற்று தகவல்களை, சுற்றுலாத்துறை அங்கிகாரம் பெற்ற வழிகாட்டி மதன் என்பவர் அவரிடம் விளக்கினார்.

அவற்றைக் கேட்டு வியந்த அவர் தன் மொபைல் போனில் கணவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். சுற்றுலாப் பயணிகள் சிலரும் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com