மோட்டார் சைக்கிள் திருடன் கைது

மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி சிவராம்நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 56).

இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை வீரபாண்டியில் உள்ள திருமண மண்டபம் முன்பு நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது அந்த பைக்கை ஒரு வாலிபர் திருடிச் செல்ல முடியன்றார்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் பிடிபட்டவர் பவர் ஹவுஸ் தெருவைச் சேர்ந்த விஸ்வநாதன் (22) என தெரிய வரவே அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com