அரசு பஸ் மீது மோதியதில் லாரி டிரைவர் கால்கள் துண்டிப்பு

திண்டுக்கல் அருகே அரசு பஸ் மீது மோதியதில் லாரி டிரைவரின் கால்கள் துண்டிக்கப்பட்டது.
விபத்தில் உருக்குலைந்த லாரி, சேதமடைந்த அரசுபஸ்.
விபத்தில் உருக்குலைந்த லாரி, சேதமடைந்த அரசுபஸ்.
Published on

வேடசந்தூர்:

திருச்செந்தூரில் இருந்து ஈரோடு மாவட்டம் அந்தியூருக்கு அரசு விரைவு பேருந்து சென்றது. இந்த பஸ் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நாகம்பட்டி நான்குவழிச் சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.

அப்போது முன்னால் சென்ற சரக்கு வாகனத்தில் இருந்து டிரம்கள் சரிந்து விழுந்தன. இதைப்பார்த்ததும் அரசுபஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதனால் பின்னால் வந்த லாரி டிரைவர் பிரேக் போட முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்து பஸ்சின் பின்பக்கமாக மோதியது.

இதில் லாரியின் முன்பகுதி முற்றிலும் உருகுலைந்தது. லாரி டிரைவர் வேல்முருகன் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தார். சம்பவம் குறித்து அறிந்ததும் வேடசந்தூர் சப் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், ஏட்டு பார்த்தசாரதி, நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். வேல்முருகனின் 2 கால்களிலும் படுகாயம் ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பின்னர் மேல்சிகிச் சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வேல்முருகன் அழைத்துச் செல்லப்பட்டார். விபத்து குறித்து வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com