தியாகதுருகம் அருகே சாராயம் விற்றவர் தப்பி ஓட்டம்

போலீசார் புக்கிரவாரி புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். விற்பனைக்காக அவர் வைத்திருந்த 19 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த னர்.
தியாகதுருகம் அருகே சாராயம் விற்றவர் தப்பி ஓட்டம்
Published on

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே வரஞ்சரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் புக்கிரவாரி புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கல்லுக்குட்டையில் உள்ள தனது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் ராமலிங்கம் தப்பியோடினார். மேலும் அங்கு விற்பனைக்காக அவர் வைத்திருந்த 19 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய ராமலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com