கிணற்றில் தவறிவிழுந்து கூலித்தொழிலாளி சாவு

குபேந்திரனுக்கு அடிக்கடி மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதால், மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவார்.குடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது வழியில் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார்.
கிணற்றில் தவறிவிழுந்து கூலித்தொழிலாளி சாவு
Published on

தருமபுரி, 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மகேந்திரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரங்கநாயகி (வயது 26). இவர்களுக்கு ரட்சகன் என்ற மகன் உள்ளார். குபேந்திரனுக்கு அடிக்கடி மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதால், மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவார்.

சம்பவத்தன்று அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது வழியில் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார். இந்த சம்பவம் குறித்து அவரது அண்ணன் அஜித், ரங்கநாயகிக்கு தகவல் தெரிவித்தார். உடனே ரங்கநாயகி அங்கு வந்து கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் அங்கு வந்து குபேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com