மரக்காணம் அருகே மனைவியை அடித்து எரித்து கொன்ற கணவன்

மரக்காணம் அருகே கணவன் மனைவியை அடித்து எரித்து கொன்றதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
மரக்காணம் அருகே மனைவியை அடித்து எரித்து கொன்ற கணவன்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எம்.புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லக்கண்ணு (வயது 62). இவரது மனைவி ஞானம்மாள் (60). இவர் நேற்று மாலை வீட்டில் உடல் எரிந்த நிலையில் மர்மமானமுறையில் இறந்து கிடந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இறந்து கிடந்த ஞானம்மாள் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது மூதாட்டியின் கணவர் செல்லக்கண்ணு போலீசாரிடம் தெரிவிக்கையுல் தனது மனைவியுடன் வாய்தகராறு ஏற்பட்டதாகவும், இதில் மனம் உடைந்த ஞானம்மாள் வீட்டில் இருந்த மண்எண்ணை ஊற்றி தீவைத்து தற்கொலை கொண்டார் என கூறினார்.

இதையடுத்து போலீசார் ஞானம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை மாநிலம் கனக செட்டிக்கு ளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரி சோதனையில், ஞான ம்மாகள் அடித்து கொலை செய்ய ப்ப ட்டு எரிக்க ப்பட்டு ள்ளது தெரிய வந்தது. இதனை த்தொட ர்ந்து ஞானம்மா ளின் கணவர் செல்லக்கண்ணுவை போலீஸ் நிலையத்தில் வைத்து மரக்காணம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com