வீட்டின் கதவை உடைத்து நகைகள் கொள்ளை

அறைக்குள் இருந்த பீரோ கதவுகள் திறக்கப்பட்டு இருந்தது. 52 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
வீட்டின் கதவை உடைத்து நகைகள் கொள்ளை
Published on

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள திருமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ஜலில்(வயது 50).

இவர், வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய மனைவி சைதா பானு(48) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில அவர் கணவருடன் வசித்து வருகிறார்.

இளைய மகள் திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த இளைய மகளை சைதாபானு நேற்று அதிகாலை 3 மணிக்கு ரெயிலில் அழைத்துச்சென்று திருச்சியில் உள்ள கல்லூரியில் விட்டு விட்டு மாலை வீடு திரும்பினார்.வீட்டிற்கு வந்து வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பது கண்டு சைதா பானு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்குள்ள அறைக்குள் இருந்த பீரோ கதவுகள் திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 52 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து சைதா பானு அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா, துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் மற்றும் தனிப்படை போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com