கார் தீப்பிடித்து எரிந்தது

அதிர்ச்சி அடைந்த அருண் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கினார்.தீப்பற்றிய உடன் அருண் கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கார் தீப்பிடித்து எரிந்தது
Published on

போரூர்:

வடபழனி ஈஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது48) தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று இரவு வெளியே செல்வதற்காக வீட்டு முன்பு நிறுத்தி இருந்த காரை இயக்கினார். அப்போது திடீரென காரில் இருந்து கரும்புகை கிளம்பியது.

சிறிது நேரத்தில் தீப்பிடித்து மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அருண் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் தீ மளமளவென கார் முழுவதும் பற்றி எரிந்தது.

அருகில் இருந்தவர்கள் காரில் பற்றிய தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். எனினும் கார் முழுவதும் சேதம் அடைந்தது. காரில் தீப்பற்றிய உடன் அருண் கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com