காம்பவுண்டு சுவரை உடைத்து வீட்டிற்குள் புகுந்த கார்

நத்தம் அருகே வீட்டிற்குள் புகுந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டு காம்பவுண்ட் சுவரை உடைத்து நின்ற கார்.
வீட்டு காம்பவுண்ட் சுவரை உடைத்து நின்ற கார்.
Published on

மதுரை சிக்கந்தர்சாவடியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 32). இவர் கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். நேற்-று மாலை மதுரையிலிருந்து நத்தம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.

புதுக்கோட்டை முடக்-கு சாலை பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த செல்வம் (54) என்பவரது வீட்டின் காம்பவுண்டு சுவரை இடித்து வீட்டிற்குள் இருந்த கார் மீதும் மோதியது.

செல்வம் தனது குடும்பத்துடன் லிங்கவாடியில் நடந்த கோவில் திருவிழாவிற்-கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இருந்த போதும் காம்பவுண்டு சுவரில் கார் மோதியதை கண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் முத்துக்குமாரை பிடித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com