வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த அ.தி.மு.க.வினர்

மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க சார்பில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. சீர்காழி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடந்தது.
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடந்தது.
Published on

சீர்காழி:

மதுரையில் வருகிற 20ஆம் தேதி அ.தி.மு.க சார்பில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனிடையே மாநாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து எழுச்சி மாநாட்டிற்கு பொதுமக்க ளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேனர், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி சீர்காழி பஸ் நிலையம் பகுதியில் நடைபெற்றது.

மாவட்ட அவை தலைவர் பி.வி. பாரதி தலைமையில், நகர செயலாளர் எல்.வி.ஆர் வினோத் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , பைக், ஆட்டோ, வேன் , கார், உள்ளிட்டவற்றில் அ.தி.மு.க எழுச்சி மாநாடு குறித்த ஸ்டிக்கர் மற்றும் பேனரை ஒட்டிப் பணிகளை அவை தலைவர் பி.வி. பாரதி தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சீர்காழி முன்னாள் நகர செயலாளர் பக்ரிசாமி , ஜெ.பேரவை செயலாளர் ஏ.வி. மணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு பரணிதரன், தொழில் அதிபர் சீனிவாசன் , நகர்மன்ற உறுப்பினர்கள் நாகரத்தினம் செந்தில், கிருஷ்ணமூர்த்தி, பொறு ப்பாளர்கள் வக்கீல்கள் நெடுஞ்செழியன், மணிவ ண்ணன் மற்றும் சுரேஷ், ரவி சண்முகம், நகர மகளிர் அணி செயலாளர் லெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com