வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்து:வாலிபர் உள்பட 2 பேர் சாவு

அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.சம்பவ இடத்திலேயே ஸ்டீபன் வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்து:வாலிபர் உள்பட 2 பேர் சாவு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் வசந்தகுமார் (வயது33). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று சூளகிரி அருகே காமன்தொட்டி மேம்பாலம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஸ்டீபன் வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம், கொண்டலஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது53). இவர் நெடுங்கல்-காவேரிப்பட்டணம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எழுமலையான்கொட்டாய் என்கிற இடத்தின் அருகில் வந்த போது அந்த வழியாக வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக இருச்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முனியம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முனியம்மாள் உயிரிழந்தார்.

இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com