ரூ.3 கோடி நிதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி - தஞ்சை அரண்மனை தேவஸ்தானம்

தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட கோவில்களில் போதிய வருவாய் இல்லாத காரணத்தினால் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு மானியமாக ரூ.3 கோடியை தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு கடந்த 4-ந் தேதி வழங்கியது.
முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லேவிடம் நிதி வழங்கினார்.
முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லேவிடம் நிதி வழங்கினார்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட 88 கோவில்களில் பெரும்பாலான கோவில்களில் போதிய வருவாய் இல்லாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் தமிழக அரசு மானியமாக ரூ.3 கோடியை தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு கடந்த 4-ந் தேதி வழங்கியது.

இதனை தமிழக முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லேவிடம் வழங்கினார்.

இதில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் நிதி வழங்கிய தமிழக அரசுக்கும், முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com