டெல்டா மாவட்டங்களில் நெல் உலர்த்தும் ஆலை உருவாக்க வேண்டும்

டெல்டா மாவட்டங்களில் நெல் உலர்த்தும் ஆலை உருவாக்க வேண்டும் என வி.சி.கட்சி விவசாய சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

ஒரத்தநாடு:

தமிழக அரசு விவசாயத்திற்கான தனி பட்ஜெட் தயாரிக்க விவசாயிகள் அமைப்புகள், பொதுமக்கள், ஆகியோர்கள் ஆலோசனை வழங்கலாம் என கூறியுள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக வரவேற்கிறோம்.

பல ஆண்டுகளாக இது தான் எதிர்பார்த்தோம் திராவிட முன்னேற்றக் கழக அரசு நடந்த சட்டமன்ற தேர்தலில் முன்பு தனது தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 4 ஆயிரம் கோடியை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி 5 ஆண்டுகள் ஆட்சியில் 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி நீர்நிலை ஆதாரத்தை முழுமையாக நீர் மேலாண்மையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளதை செயல்படுத்த வேண்டும்.

அதே நேரத்தில் நீர் நிலையில் உள்ள வீடுகளை அகற்றும் போது உடனே அவர்களுக்கு குடி மனை பட்டா, வழங்கி வீடு கட்டிக் கொடுக்கவும் முழுவீச்சில் தமிழக அரசு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் மட்டும் நெல் உற்பத்தி ஏறத்தாழ 

15 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படுகிறது. 

ஆனால் மழைக்காலத்தில் நெல் அறுவடை நேரத்தில் ஈரப்பதம் 18 சதவீதத்திற்கு கீழ் தான் எடுக்கப்படுகிறது.

அப்போது அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர் அதற்கு அரசு பெரும்பான்மை இடத்தில் நெல் உலர்த்தும் ஆலையை உருவாக்க வேண்டும், சிமெண்ட் தளம் அனைத்து நெல் கொள்முதல் நிலையத்திலும் அமைக்க வேண்டும்.

அதற்கு போதுமான நிதியை வரும் பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், நெல் கொள்முதல் செய்வதை தமிழக அரசு கொஞ்சம் கொஞ்சமாக நிதியை 

ஒதுக்க ஏற்பாடு செய்ய வேண்டும், அதோடு கடலை, உளுந்து, எள், பருப்பு, போன்ற தானியங்களையும் கொள்முதல் செய்ய தமிழக அரசு நிதி ஒதுக்கி அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

நமது தொலை நோக்கமாக அனைத்து விவசாய உற்பத்தி பொருளையும் அரசே கொள்முதல் செய்ய நிதியை உருவாக்க வேண்டும், அப்போதுதான் நாம் யாரையும் நிதி தாருங்கள் என்று கையேந்தும் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும், அப்போதுதான் நாம் சுயநிர்ணய உரிமையோடு வாழ முடியும், அதற்கு நிதி ஆதாரத்தை தமிழக அரசு முழு முனைப்பு காட்ட வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.

அதேபோல் புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தி முன்னாள் முதல்வர் கலைஞர் நிலத்தில் விவசாயம் செய்வதற்கு வழங்கியதை போல் இப்போதும் தமிழகம் முழுவதும் குழு அமைத்து புறம்போக்கு இடம், மந்தைவெளி புறம்போக்கு போன்றவற்றை ஆக்கிரமித்துள்ளவர் களிடமிருந்து உடனே எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதற்கு நிதி ஒதுக்கி ஒழுங்குபடுத்தி, தமிழக அரசு நிலத்தை வைத்துக்கொள்ள வேண்டும், இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் மாற அரசு முன்மாதிரியாக இருந்து அதற்கான விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும், அதற்கான நிதியையும், குழுவையும், அமைக்க வேண்டும்.

ரசாயன உரம் பூச்சிக்கொல்லியில் இருந்து முழுமையாக விடுபட தமிழரசு செயலாற்ற வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்களை உண்டாக்கவும் அதற்கு நிதி ஒதுக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை நிரந்தரமாக உருவாக்க வேண்டும்.

உற்பத்தி கொள்முதல் வினியோகம் செய்ய அரசு பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும், அதற்கு தனி பட்ஜெட் இருக்க வேண்டும், எனவும் விடுதலை சிறுத்தை கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணை செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com