

கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள ஓலைப்பாடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் விஜய பிரசாத் தலைமையில் நடைபெற்றது.
கூட்டமைப்பு தலைவர் பிரபாகரன், ஊராட்சி உறுப்பினர் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கால்நடை மருத்துவர் சரவணன் வரவேற்று பேசினார்.
முகாமில் சிறப்பு விருந்தினராக பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான தாமரைச்செல்வன், ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், ஆகியோர் கலந்துகொண்டு சிறந்த கால்நடை வளர்த்த விவசாயிகளுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினர்.
முகாமில் கால்நடை மருத்துவர் கபிஸ்தலம் வடிவேலன், கால்நடை ஆய்வாளர் தமிழ்வாணன், ரூபா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சாந்தி, மதியழகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரவணன், உள்பட பலர் கலந்து கொண்டு 300&க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சினைப் பரிசோதனை, குடற்புழு நீக்கம், உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து கலந்து கொண்ட அனைத்து கால்நடைகளுக்கும் தாதுஉப்பு வழங்கினர்.