தடுப்பூசி செலுத்தியவர் விபரம் டிஜிட்டல் பஸ்சில் பதிவேற்றம்

சேதுபாவாசத்திரம் அருகே சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரத்தை டிஜிட்டல் பஸ்சில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது.
டிஜிட்டல் பஸ்சில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் விபரம் பதிவேற்றம்
டிஜிட்டல் பஸ்சில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் விபரம் பதிவேற்றம்
Published on

பேராவூரணி:

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை சார்பில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள், முன் களப்பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த விவரங்கள் அரசின் கோவின் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படு கிறது.

இதற்காக டிஜிட்டல் பேருந்து வசதியை கடந்த மாதம் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டாரங்களுக்கும் சென்று, அங்கு உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவ அலுவலர்கள் வழிகாட்டுதலின்படி தன்னார்வலர்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அழகியநாயகிபுரம், ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம் மற்றும் மருத்துவ அலுவலர்கள் வழிகாட்டுதலின்படி தன்னார்வலர் மல்லிப் பட்டினம் நூருல்அமீன், பேராவூரணி நீலகண்டன் மற்றும் தன்னார்வலர்கள் அனைத்து விவரங்களையும் கணினியில் பதிவேற்றம் செய்தனர். 

சுமார் 1,200 பேரின் விபரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com