தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி

செங்கிப்பட்டியில் தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
செங்கிப்பட்டியில் நடந்த தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி.
செங்கிப்பட்டியில் நடந்த தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி.
Published on

பூதலூர்:

உலக சுகாதார வாரத்தையொட்டி தஞ்சை சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகம், சாத்தி தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

செங்கிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி சானூரப்பட்டி கடைவீதி வழியாகச் சென்று, மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. 

பேரணிக்கு சாத்தி தொண்டு நிறுவன மாவட்டத் திட்ட அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். செங்கிப்பட்டி ஊராட்சித்தலைவர் சித்ரா கார்த்தீசுவரன், அன்னை தெரசா சமுதாயக் கல்லூரித் தாளாளர்பால்ராஜ் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமையாசிரியை ராஜ்மாலா பேரணியைத் தொடக்கி வைத்தார்.

பூதலூர் மக்கள் உரிமைக் கூட்டமைப்புத்த லைவர் பழராஜ்குமார். ஏகம் பவுண்டேசனின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இன்பதுரை வாழ்த்துரை வழங்கினர். நிறைவில்,சாத்தி தொண்டு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com