துணி துவைக்கும் களத்தினை சீரமைத்து தர வேண்டும்

பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் கட்டப்பட்ட துணி துவைக்கும் களத்தினை சீரமைத்து தர வேண்டும் என சலவைத் தொழிலாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயன்பாட்டில்லாமல் கிடக்கும் ஆழ்குழாய்க் கிணறு, பழுதடைந்த கிடக்கும் தண்ணீர் தொட்டிகள்.
பயன்பாட்டில்லாமல் கிடக்கும் ஆழ்குழாய்க் கிணறு, பழுதடைந்த கிடக்கும் தண்ணீர் தொட்டிகள்.
Published on

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை நகராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சலவைத் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் துணிகளை துவைக்கவும், துவைத்த துணிகளை உலர்த்தவும் பயன்படுத்துவதற்காக 2004ம் ஆண்டில் அப்போதைய நகராட்சி நிர்வாகம் தஞ்சை சாலையில் செம்பராங் குளத்தருகே அதற்கென ஒரு இடம் ஒதுக்கி அங்கு 18 தண்ணீர் தொட்டிகள் அமைத்து அதற்காக ஆழ்குழாய் கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டது.

மேலும் இதைச் சுற்றி முள்வேலியும் அமைக்கப்பட்டு அந்தப் பகுதியை சலவைத் தொழிலா ளர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நீண்ட வருடங்களாக அங்கு அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு பழுதடைந்து பயன்படுத்தப்படாமல் இருந்து வருகிறதுஅதோடு துணிகளைத் துவைப்பத ற்காக 18 நீர் தொட்டிகள் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது வெறும் 5 தொட்டிகள் மட்டுமே பயன்படுத்தும் நிலையில் உள்ளது மற்றவை அனைத்தும் பழுதடைந்துள்ளது, 

மேலும் இந்த இடத்தை சுற்றி அமைக்கப்பட்ட முள்வேலிகள் சேதமடைந்த நிலையில் உள்ளதால், சிலர் இந்த இடத்திற்கு வந்து இயற்கை உபாதைகளை கழித்துவிட்டு செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. 

500 பேர் பயன்படுத்தப்படும் வகையில் அமைக்கப்பட்ட 18 தொட்டிகள் போதாமல் முறைவைத்து துணி துவைத்து வந்த நிலையில், தற்போது 5 தொட்டிகளே பயன்படுத்த முடியும் என்ற நிலையில் உள்ளதால், சலவைத் தொழிலாளர்கள் உரிய நேரத்தில் வேலை செய்யமுடியாமல், அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள ஏரி, குளங்களில் துணிகளை துவைக்க வேண்டியுள்ளது,

மேலும் மழைக்காலத்தில் துவைத்த துணிகளை உலர்த்தி வைக்கும்வகை யில் கூடாரங்கள் அமைத்து தரவேண்டும் என்றும், ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு பயன்பாடு இல்லாமல் கிடக்கும் ஆழ்குழாய் கிணறையும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், சுற்றி வேலி அமைக்கவும், அந்த பகுதியில் மண்டிக் கிடக்கும் செடிகளை அப்புறப்படுத்தியும், பழுதடைந்து கிடக்கும் தொட்டிகளை உடனடியாக சீரமைக்கவும், நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சலவைத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பட்டுக்கோட்டை நகராட்சியில் ஆணையரால் நிலவும் அதிகாரப் போட்டியில் ஆணையரின் அனுமதி பெற்று நகர்மன்றத் தலைவர் சலவைத் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என்று இந்த தொழிலை நம்பியுள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com