

தஞ்சாவூர்:
மத்திய அரசை கண்டித்து வருகிற 28 மற்றும் 29 ஆகிய தேதி பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு தஞ்சை கீழவீதியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் பிரசார இயக்கம் தொடங்கி நடைபெற்றது.
கீழவாசல் காமராஜர் சிலை, மணிக்கூண்டு, காவேரி சிறப்பங்காடி, ரெயிலடி , அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.
இதற்கு தொ.மு.ச மாவட்ட செயலாளர் சேவியர், சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ஜெயபால், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் தில்லைவனம், ஐ.என்.டி.யூ.சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் அன்பழகன், ஜெனரல் இன்சுரன்ஸ் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சத்தியநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தெருமுனைப் பிரசார கூட்டத்தில் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவி அளிக்ககோரியும், விளக்கியும் 5 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.