உலக நன்மைக்காக பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை

திருப்பனந்தாள் அருகே உலக நன்மைக்காக பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
திருவாய்பாடி பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனை.
திருவாய்பாடி பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனை.
Published on

கும்பகோணம்:

திருப்பனந்தாள் அருகே உள்ள திருவாய்ப்பாடியில் புதிய இறை இல்ல பள்ளிவாசல் சிறப்பு தொழுகை மற்றும் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

வட்டார மஹல்லா ஜமாஅத் கூட்டமைப்பின் தலைவர் ஷாஜஹான் தலைமை தாங்கினார். வட்டார பொருளாளர் ஷர்புதீன், திருவாய்ப்பாடி ஜமாஅத் தலைவர் ஹாஜா மைதீன் உள்ளிட்ட திருவாய்ப்பாடி ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஜமாஅத் செயலாளர் நிஜாம் மைதீன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர்உமர் ஜஹாங்கீர் தொகுப்புரை வழங்கினார்.

ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட பொருளாளர் முகம்மது அப்பாஸ், வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் அப்துல்லாஹ் பொருளாளர் முஹம்மது தாவூதி உள்ளிட்ட உலமா பெரு மக்களும், ஆலிமாக் களும், கலந்துகொண்டு சிறப்புத் தொழுகை நடத்தி உலக நன்மைக்காக பிரார்த்தனை நடத்தினர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட தலைவர் முகம்மது சுல்தான், ஊராட்சி மன்ற தலைவர் பிரதாப் சிங் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். முடிவில் சாதிக் பாட்சா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com