கும்பகோணத்தில் 15 தேக்கு மரங்கள் கடத்தல்

கும்பகோணம் அருகே பூங்காவில் 15 தேக்கு மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே பழவத்தாங்கட்டளை ஊராட்சிக்கு சொந்தமான சாய்ராம் பூங்காவில் 39 தேக்கு மரங்கள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பூங்காவில் இருந்த 15 தேக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி உள்ளனர்.

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தேக்கு மரங்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் பழவத்தாங்கட்டளை ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், ஒன்றிய அலுவலகத்திலும் புகார் தெரிவித்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன் நாச்சியார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com