வேளாண் கல்லூரி மாணவிகள் நாற்று நடும் பயிற்சி

நடுவூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் நாற்று நடும் பயிற்சி நடைபெற்றது
மாணவிகள் நாற்று நட்டனர்.
மாணவிகள் நாற்று நட்டனர்.
Published on

தஞ்சாவூர்:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு பட்டப்படிப்பு பயிலும் 11 மாணவிகளான ஜோதிகா, காஞ்சனா, கனிகா, கவிப்ரியா, காவ்யா, காவ்ய ஸ்ரீ லட்சுமி  பிரபா, கீர்த்தனா‌, ந மதுமிதா, சு .மதுமிதா, மகாலட்சுமி ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். ஊரக வேளாண் பணி அனுபவமானது‌, வேளாண் மாணவர்களுக்கு கிராமங்களின் நிலையைப் பற்றி அறியவும், விவசாயிகளின் பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கான தீர்வை நல்குவதாகும்.

அதன் ஒரு பகுதியாக நடுவூர் என்னும் கிராமத்தில்   குறுகிய நவரை கால நெல் பயிரின் நாற்று நடும் பணியில் ஈடுபட்டனர்.    நெல் ரகமானது 118‌ நாள் மற்றும் சாயாத ‌தன்மை கொண்ட பயிராகும்‌. இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com